Wednesday, 15 August 2018

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்


        


  தாய்மொழிக்கு நிகர் வேறுமொழிஇல்லை
 இன்பத்தமிழ் மொழிக்கு இணை ஏதும் உண்டோ!
 அகம் எங்கள் அன்பின் தொடக்கம்
 புறம் எங்கள் வீரத்தின் விளைநிலம்
 வள்ளுவனின் முப்பாலும்
 ஐம்பெரு ஐஞ்சிறு காப்பியத்தோடு
 உலக மொழிகளின் முதன்மைக்கும்
முதல் மனிதன் தோன்றியதற்கும்
உரிமை கொண்டது என் தமிழ்
பாரதி பாடிய பெண்விடுதலையும் 
பாரதிதாசன் அருளிய தமிழின் இனிமையும்  தமிழ்த்தேனாக  என் காதில் நுழைந்து
மனத்தேனாக  மகிழவைத்து
என் இளமைக்கு பாலாக இருந்து
அறிவை வளர செய்கிறது