Tuesday, 18 December 2018

செருப்புக்கு ஒரு கடிதம்


செருப்புக்கு கவிதை வடிவில் ஒரு கடிதம்.

3flipflops.jpgஉன்னுடன் ஒரு பேட்டி எடுத்தவன்
மேத்தா
உனக்கு கடிதம் எழுதுபவன்
நான்

ஆதரவற்றவனுக்கு அன்னம்
இல்லாத தருணத்திலும்
உன்னை விற்க
ஆயிரம் விளம்பரங்கள்

உன்னை விற்பவன்
செல்கிறான் மகிழுந்தில்
உனக்கு மருத்துவம் பார்ப்பவன்
இருக்கிறான் தெருவீதியில்

சிலநேரங்களில் நீ
காணாமல் போய்விடுகிறாய்
கோவில் விழாக்களில்

ஒருநாள் உன்னை
காணமாட்டார்கள்
பாதயாத்திரை பக்தர்கள்

கைக்கிளை மேற்கொள்ளும்
தலைவனுக்கு தலைமகள்
எடுத்துக்காட்டும் எச்சரிக்கை
ஆயுதம் நீ

இருப்பினும் 
உன் மருத்துவன்
சமூகத்தில் உயரவேண்டும்
அடியேன் அன்புடன் கேட்கிறேன்        

Sunday, 16 December 2018

புயலே போய்விடு

போய்விடு ! போய்விடு!
புயலே நீ போய்விடு!

எங்கள் சாபம் உனக்கு வேண்டாம்
புயலே நீ போய்விடு

வேற்றுமையில் ஒற்றுமையாய் வாழும் 
எங்கள் இந்தியா
ஒற்றுமையை உருக்குலைக்க புயலே
நீ வந்தியா

கஜா என்ற உன் பெயரை உலகம்
உச்சரிக்க செய்தது ஏன்?
வரலாற்றில் இடம் பிடிக்கவா?

உன்னைக்கண்டு பணக்காரன்
மாடிவீட்டில் தங்கிவிட்டான்
நீ விட்ட பெருமூச்சில்
ஏழை குடிசையை பறிகொடுத்தான்

ஏழையின் அழுகுரல் உனக்கு
கேட்கவில்லையா?
இரக்கம்கொள்ள என்னவோ உனக்கு
இதயம் இல்லையா?

போய்விடு!போய்விடு!
புயலே நீ போய்விடு!

உன்னுடன் பிறந்த உறுப்பினர்
எத்தனையோ
எங்களிடம் உறவுகொள்ள
உண்னிடம் இழப்பதற்க்கோ
எங்களிடம் ஒன்றுமில்ல

நிவாரணம் என்ற பெயரில்
எம் தலைவர் பணமழையில் நீந்துகிறார்
பேரிடர் என்ற பெயரில்
நாங்களோ கண்ணீரில் நீந்துகிறோம்

போய்விடு!போய்விடு!
புயலே நீ போய்விடு! 



Monday, 10 December 2018

கறுப்பு

இன்று சமூகத்தால் எதிர்ப்புக்காக மட்டும் பயன்படுத்தப்படும் நிறமாக உள்ள கறுப்பு நிறத்தை வைத்து எழுதும் கவிதை


எதிர்ப்பு என்ற பெயரில் உன்னை 
எடுத்துக்காட்டும் மூடர்கள் 
Related image
கருவிழி கறுப்பபானதால் 
அதைத் தோண்டி எடுப்பாரோ ?

தலைமயிர் கறுப்பு என்பதால் 
பிடுங்கி எறிவாரோ ?

உடல்நிறம் நீயானதால் 
முகத்தில் சாயம் பூசுவரா?

தமிழனின் உண்மை நிறமாய் 
நீ இருக்கிறாய்

ஏனைய நிறங்களை ஏங்கவிடும் 
தலைவனும் நீதான் 

அரசியல் கட்சிக்கொடிகளின் 
அரசனும் நீதான் 

இருளுக்கு உரிமையான 
உன்னைக்கண்டு அஞ்சி ஓடும் 
இவர்கள் 

உனக்கு தேசியக்கொடியில் 
இடம் தராத வருத்தம் 
ஒன்றுதான் என்னை 
வாட்டுகிறது.