Wednesday, 2 May 2018

இளைஞனே வா



இளைஞனே வா! வா! 
இமயம் தொடுவோம் வா! வா! 
இல்லை என்ற வார்த்தை 
இதயம் சொல்லிடலாமா!

உயிர் மூச்சை உதறி தள்ளு 
வாய்மை மட்டும் வெல்லும் 
உலகுக்கு உரக்க சொல்லு 

சாதிகளையெல்லாம் ஓரங்கட்டி 
சமத்துவம் செய்வோம் வா! வா!

இல்லை இங்கு ஏழை 
வறுமை வந்த வலி திரும்பும் 
திசையெங்கும் மொனங்கள் பெருகும் 
நம் ஒற்றுமை கண்டு உருகும் 
மனங்கள் உண்டு 

ஒன்றுபட்டு உழைத்தால் 
கானல் நீரல்ல கனமழைதானே!
நம்மால் முடியும் வா! வா! 
இன்றே முடியும் வா!வா!


1 comment: