அன்று இரவு
அம்மாவாசை தான்
இருப்பினும்
நிலவும்
நட்சத்திரமும்
தோன்றியது
தொலைவில் சென்ற பேருந்தில்
இருந்து

ஊரைப் பார்த்தபோது
ஒளிரும் விளக்குகள்
நட்சத்திரமாய் ஜொலிக்க
அதன் அழகை கண்டு
ஜன்னல் கம்பியில் தலை சாய்க்க
இரவு நேர ஈரக்காற்று
இதமாய் தழுவியது
இதயத்தை
No comments:
Post a Comment