Thursday, 11 October 2018

திசைமாறி பாயும் தாமிரபரணி

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தின் காரணமாக குறுக்குத்துறை கோவில் மூழ்கிவிட்டது.

தாமிரபரணி வெள்ளம் கிழக்கே தூத்துக்குடி கடலில் வீணாக செல்கிறது. அதை தடுத்து விவசாய பாசனத்திற்க்காக தண்ணீர் வழங்கலாம். ஆற்றிற்கு வடக்கே கோவில்பட்டி நோக்கி ஒருகால்வாய் வெட்டி வடக்கிலுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கலாம். 

ஆற்றிற்கு தெற்க்கே கால்வாய் அமைக்க தேவையில்லை. ஏனென்றால், ஏற்கனவே ஒரு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அமைத்து என்ன பயன். ஒரு பயனும் இல்லை. தங்க நாற்கர சாலை கால்வாய்க்கு இடையில் செல்கிறது. 

அதில் ஒரு பாலம் அமைந்தால்தான் தண்ணீர் மேற்கிலிருந்து கிழக்கே செல்லும். நாற்கர சாலை அமைக்கும்போதே அதில் பாலம் அமைக்காமல் செயல்பட்டது நம் சீர்கெட்ட அரசு. மூன்றடைப்புக்கு தெற்க்கே உள்ள அந்த கால்வாயில் தயவுசெய்து பாலம் அமைத்து தரும்படி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். 

ஏனென்றால் ஆந்த கால்வாயை நம்பி ஐந்தாயிரம் ஏக்கர் விவசாயநிலம் காத்திருக்கிறது. எனவே, வீணாக கடலில் சேரும் தாமிரபரணி தண்ணீரை கடலில் கலக்க விடாமல் விவசாயத்திற்கு வழங்குங்கள் என்று அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நம் மாநிலத்திற்கு வடக்கே உள்ள கர்னாடக மாநிலம் தண்ணீரை சேமிப்பதற்கு ஏராளமான அணைகளை கட்டிவைத்துள்ளது. ஆனால், நம் தமிழ்நாடு அரசு?

தாமிரபரணியை சேமித்து வைக்க சேர்வலாறு அணை. காவிரியை  சேமித்து வைக்க மேட்டூர் அணை. இந்த இரண்டு அணையும் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டுள்ளது. அவருக்கு பிறகு ஒரு அணைகூட கட்டப்படவில்லை.

இப்போது உள்ள அரசியல்வாதிகள் எல்லோரும் பணத்தை சேமிப்பதில் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். வேறுஎங்கிருந்து தண்ணீரை சேமிப்பார்கள். கர்நாடகா அரசு நமக்கு தண்ணீர் தருவதே அதிசயமாகத்தான் நடக்கும்.

Image result for கபினி அணையைதற்போது அங்கு பெய்து வரும் கனமழையால் தங்களுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று கபினி அணையை முழுவதும் திறந்து விட்டனர்.

காவிரி தண்ணீர் முழுவதும் தமிழ்நாட்டை நோக்கி பாய்ந்து வருகிறது. ஆனால், அதை சேமித்து வைக்க ஒரு அணைகூட இல்லை.தாமிரபரணியை சேமிப்பது நம் அனைவரின் கடமை என்பதை உணரவேண்டும்.

'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவனின் வாக்குப்படி நாம் அனைவரும் மழைநீரை சேமிப்போம்.

No comments:

Post a Comment