ஒருகணம் நீ திரும்பிப்பாராடி
வலிகளில் கொடியது
காதல்வலி
என்னை நான் மறந்துபோகிறேன்
என்னை நீ பிரிந்துசென்றால்
இப்போதே இறந்து போகிறேன்
வலிகளில் கொடியது
காதல்வலி
எனக்கு நீ தந்துவிடாதே
சுகத்தில் சிறந்தது
காதல்சுகம்
காதல்சுகம்
எனக்கு நீ தராமல்பபோகாதே!
உன் கருவிழி கரம்பற்றி
கடலை கடந்து செல்வேன்
இருவிழி இமைகள் பிடித்து
இமயத்தை ஏறிச்செல்வேன்
உடல்குருதி முழுதும்
உன்பெயரை எழுதிவைத்தேன்
உலகத்து வானம் முழுதும் உன்புகழை
பொரித்து வைப்பேன் பார்!
பிறர்பசி தீர்க்க உன்கையில்
அட்சயபாத்திரம் இருக்கு
என்துயர் நீக்க உன்மனதில்
என்ன மந்திரம் இருக்கு சொல்!
தோளில் சாய்ந்தேன்
தயைப்போல் நெஞ்சில்
தாங்கினாய்
உன் கூந்தல் புதரில்
சிக்கிக்கொண்டேன்
பூவைப்போல் தலையில்
தாங்கினாய்
கண்ணான கண்ணே உன்ன
கண்ணாக பாக்கணும்
பொன்னான பெண்ணே உன்ன
பொன்போல காக்கணும்
உன் கரண்டக்கால் கொலுசுசத்தம்
காற்றில் பறந்து
ஊரெல்லாம் கச்சேரி பாடுதடி !
பாட்டைக்கேட்க என்மனம்
ஆசையாய் பின்னால் ஓடுதடி!