கனல்விழி கண்ணகி உன்
கண்களில் தெரிகிறாள்
மாந்தளிர் மேனியாள் மாதவி
உன் மேனியிள் தெரிகிறாள்
உன்னை எண்ணி
நொடிப்பொழுதும்
நொடிப்பொழுதும்
பாடும் ஏழைக்கவிஞன் நான்
என்னைவிட அகவையில்
குறைந்த நீ
அழகில்
பெரியவளானாய்
இருக்கட்டும்
முத்தை அடைகாக்கும்
சிப்பிக்குள் நீ இருக்கிறாய்
உன்னை வெளிக்கொணரும்
வேள்வியில் நான் இருக்கிறேன்
வானத்தை பிரியாத
மேகமாய் உன்மனம்
அந்த மேகத்தில் ஒரு
மழைதுளியாய்
சேர விரும்புகிறேன்
கண்ணன் வரும் வேளையில்
காத்திருந்த ராதையாக
இந்த மன்னன் வரும்
வேளையில் காத்திருப்பாயா?
தெய்வம் ஒரு கண்திறந்தால்
ஏழைக்கு ஒரு வழிபிறக்கும்
நீ உன் கண்திறந்தால்
எனக்கு ஒரு வாழ்வு பிறக்கும்
எட்டாத உயரத்தில் நிலவை
வைத்தவன் எவனோ?
என் எதிரில் நிற்கும்
இந்த நிலவை படைத்தவன்
எவனோ?
அவன் என்
கையில் கிடைத்தால்
சிற்பம் செய்த
கைகளுக்கு சிலம்பு
வாங்கி சூட்டுவேன்
சூரியனை ரெண்டு துண்டாக
கொண்ட கண்கள்
ஆபரணம் அணியாத கழுத்து
ஆடம்பரம் காணாத ஆடை
அழகுக்கும் அழகு சேர்க்கிறது
நுனிமூக்கிலும் அழகு
முத்துப்பல் சிரிப்பிலும் அழகு
இரு இதழ் சிவப்பிலும் அழகு
உன் அழகைக்கண்டு சித்தன்னவாசல்
சித்திரமும் சிலிர்த்துக்கொள்ளும்
இராமன் எய்திய அம்பு
மராமரத்தை துளைத்தது
உன்னைப்பற்றிய நினைவுகள்
என் எண்ணத்தில் நுழைந்தது
என் மாமனுக்கு மகளே!
அன்புத்தாய்க்கு மருமகளே!
அருமைத் தங்கைக்கு சம்மந்தியாரே!
நீ
ஒவ்வொருவருக்கும் ஒரு முறையாக இருக்க
எனக்கென்ன முறை உண்டு சொல்லடி!
இரத்தத்தைக் கக்கி
பித்தத்தை ஏற்கும்
நீ ஒரு
வயதிற்கு வந்த வெண்ணிலா
வெண்ணிலாவே உன்னிடம்
என் காதல் சொல்ல
தயங்குகிறேன் பாரடி!
என்னைவிட அகவையில்
குறைந்த நீ
அழகில்
பெரியவளானாய்
இருக்கட்டும்
முத்தை அடைகாக்கும்
சிப்பிக்குள் நீ இருக்கிறாய்
உன்னை வெளிக்கொணரும்
வேள்வியில் நான் இருக்கிறேன்
வானத்தை பிரியாத
மேகமாய் உன்மனம்
அந்த மேகத்தில் ஒரு
மழைதுளியாய்
சேர விரும்புகிறேன்
கண்ணன் வரும் வேளையில்
காத்திருந்த ராதையாக
இந்த மன்னன் வரும்
வேளையில் காத்திருப்பாயா?
தெய்வம் ஒரு கண்திறந்தால்
ஏழைக்கு ஒரு வழிபிறக்கும்
நீ உன் கண்திறந்தால்
எனக்கு ஒரு வாழ்வு பிறக்கும்
எட்டாத உயரத்தில் நிலவை
வைத்தவன் எவனோ?
என் எதிரில் நிற்கும்
இந்த நிலவை படைத்தவன்
எவனோ?
அவன் என்
கையில் கிடைத்தால்
சிற்பம் செய்த
கைகளுக்கு சிலம்பு
வாங்கி சூட்டுவேன்
சூரியனை ரெண்டு துண்டாக
கொண்ட கண்கள்
ஆபரணம் அணியாத கழுத்து
ஆடம்பரம் காணாத ஆடை
அழகுக்கும் அழகு சேர்க்கிறது
நுனிமூக்கிலும் அழகு
முத்துப்பல் சிரிப்பிலும் அழகு
இரு இதழ் சிவப்பிலும் அழகு
உன் அழகைக்கண்டு சித்தன்னவாசல்
சித்திரமும் சிலிர்த்துக்கொள்ளும்
இராமன் எய்திய அம்பு
மராமரத்தை துளைத்தது
உன்னைப்பற்றிய நினைவுகள்
என் எண்ணத்தில் நுழைந்தது
என் மாமனுக்கு மகளே!
அன்புத்தாய்க்கு மருமகளே!
அருமைத் தங்கைக்கு சம்மந்தியாரே!
நீ
ஒவ்வொருவருக்கும் ஒரு முறையாக இருக்க
எனக்கென்ன முறை உண்டு சொல்லடி!
இரத்தத்தைக் கக்கி
பித்தத்தை ஏற்கும்
நீ ஒரு
வயதிற்கு வந்த வெண்ணிலா
வெண்ணிலாவே உன்னிடம்
என் காதல் சொல்ல
தயங்குகிறேன் பாரடி!
Super lines...😍😍
ReplyDelete