Sunday, 7 April 2019

கிராமிய காதல்

Image result for கிராமிய காதல்
காலைநேர வேலையில
களையெடுக்க வந்த புள்ள
உன் கண்ணகாட்டி
என்ன கவர்த்துபபுட்ட

கருவேலங் காட்டுக்குள்ள
விறகுவெட்ட  வந்தபபுள்ள
விறகுவெட்ட  வந்த என்ன
வெட்டியாய் நிக்க வச்ச

மாமரத் தோப்புக்குள்ள
மாடுமேய்க்க வந்த புள்ள
Image result for கிராமிய காதல்
இந்த மச்சானோட மனசையும்
சேர்த்து ஒட்டிப்போற

புடலங்கா தோப்புக்குள்ள
புல்லறுக்க  வந்த புள்ள
உன் புடவ  முந்தானையில்
என்ன முடிஞ்சிப்போற

3 comments: