அப்பாவுக்கு ஒரு கடிதம்
தன் அப்பாக்கு ஒரு மகள் கவிதைவடிவில் எழுதும் கடிதம்
என் ஆதிபரம்பொருள் அப்பா
உன் அழகு மகள் எழுதும் கடிதம்
பத்து மாதம் கருவில் சுமத்த தாயும்
காலம் முழுதும் என்னை சுமக்கும் நீயும்
கருவில் நான் மலர்ந்தவுடன்
என்னென்ன நினைத்தீர்களோ!
ஆண்பிள்ளை பிறந்தால்
வம்சம் நிலைக்கும் என்பார்கள்
என்னை நீ அரசியாக எண்ணினாய்
பெண்பிள்ளை பிறந்தாளென்று
ஊர்க்கூட்டி விருந்துவைத்தாய் ஆராரோப் பாடிப்பாடி
ஆசைமகளை ஆளாக்கினாய்
ஆராரோப் பாடியதால் தாயையும்
உன்னில் கண்டேன் அன்பாலே
ஆடுமேய்த்து கஷ்டப்பட்டு
அணிகலன் வாங்கி அழகு சேர்த்தாய்
விவசாயம் செய்து வியர்வைசிந்தி
பள்ளிக்கூடம் படிக்க வைத்தாய்
எனக்கொரு வாழ்க்கை அமைக்க
உன் வாழ்க்கையை தியாகம் செய்தாய்
எனக்கும் இடமும் வேண்டும்
ஆதிபரம்பொருள் அப்பா
உன் காலடியில்
இப்படிக்கு,
உன் அழகு மகள்
No comments:
Post a Comment