தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம்தான் நெடுங்குளம் ஊராட்சி. அந்த ஊருக்கு நெடுங்குளம், வேலென்புதுக்குளம், இலுப்பைக்குளம், மதகனேரிகுளம் என்ற நான்கு குளங்கள் உள்ளன.
கடந்த பருவமழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைத்து அணைகளும் நிரம்பியது. இதில், மணிமுத்தாறு அணையின் இரண்டாவது கால்வாய் நாங்குநேரி, காரியண்டி, ஊர் வழியாக நெடுங்குளம் வந்து சேருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதலமைச்சர் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார்.
அதன்படி, மணிமுத்தாறு அணையிலிருந்து இரண்டாவது கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இருப்பினும் நெடுங்குளத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. காரியண்டி வரை வந்தது. தண்ணீர் கொடுக்கவேண்டிய கிராமங்களுக்கு கொடுக்காமல் ஏறுக்கு மாறாக மற்ற கிராமங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தண்ணீர் கொடுக்கிறார்கள்.
எங்கள் கிராமத்திற்கு தண்ணீர் வராததால் நாங்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். எந்த பதிலும் இல்லை. பத்திரிக்கைகளில் செய்திகளாக வெளியிட்டோம் ஏறெடுத்து பார்க்ககூட இல்லை. இதனால் ஏராளமான ஏக்கர் நெல்வயல்கள் தண்ணீர் இல்லாமல் கருகின. விவசாயிகள் அனைவரும் கடன்பட்டுவிட்டனர்.
அவ்வூர் விவசாயி ஒருவர் கூறுகிறார். நா! நாற்பது மறைக்கப்பாடு நட்டேன். ஆனால், அதில் விளைந்தது வெறும் ரெண்டு மறைக்கப்பாடு மட்டும்தான்.
இதனால், நான் அரசாங்கத்திடம் சொல்வது ஒன்று மட்டும்தான் என்வயிற்றில் அடித்த மாதிரி வேறு எந்த விவசாயியின் வயிற்றிலும் அடித்துவிடாதீர்கள் என்று !
அந்த விவசாயியின் அழுகுரல் என்காதில் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ஒரு விவசாயி மட்டுமல்ல. அந்த கிராமத்தைச் சேர்ந்த பல விவசாயிகள் இப்படி அழுதுகொண்டிருக்கிறார்கள்.
விவசாயி அழமட்டும்தான் செய்யமுடியும் என்ற நிலை வந்துவிட்டது.
ஊருக்கே சோறுபோடும் விவசாயி இன்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான். இதற்க்கு முழுமுதற் காரணம் அரசாங்கம்.
ஒவ்வொரு கைப்பிடி.... சோறு உண்ணும்போதும் !
இவர்களை... நினைத்து பாருங்கள் !
உங்களுக்கு விவசாயியின் அருமை தெரியும்.
மழையே !!!
என்னை நிரப்பி விடு.
வான மகள்
தன் முகத்தை
பார்த்து மகிழட்டும்.
என்ற கவிதை ஒரு விவசாயி சோகத்துடன் கூறிய ஒரு கவிதை.