Tuesday, 27 March 2018

எங்க ஊரு வெட்டிமடம்

எங்க ஊரு நெடுங்குளம். என்னங்க தெரியாத ஊரோட பெயரா இருக்கா. ஆமாங்க என் ஊரு ஒரு சின்ன கிராமம். எங்க ஊருல மொத்தம் 3000 மக்கள் இருக்காங்க. அதுல ஆண்கள் 1750 மற்றும் பெண்கள் 1250. எங்க கிராமத்தில் நான் இருக்கக்கூடிய தெரு பெயர் யாதவர் தெரு. எங்க தெருவுல பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது.

அங்கதாங்க இளவட்ட பயனுவோ எல்லோரும் ஒண்ணுகூடுவோம். எல்லா நாளுமே இங்க ஒரு கூட்டம் இருக்கும். அந்த கூட்டத்தோட பெயர் வெட்டிக்கூட்டம் . அவுங்க இருக்கும் அந்த இடத்தையும் இப்போ வெட்டிமடம் என்று அனைவரும் கூறுகிறார்கள் 

பிள்ளையாரும் இவர்களின் பேச்சைக்கேட்டு கேட்டு அவரும் வெட்டி பிள்ளையாராக மாறிவிட்டார். ஒருபக்கம் அரசியல், மற்றொருபக்கம் அடுத்தவர்களின் கதை, சிரிப்பு என்ற பெயரில் சிலர் கடுப்பு ஏத்துவது. அனைத்தும் அங்கு நடக்கும்.


சிரித்துவாளா வேண்டும்
   பிறர் சிரிக்க வாழ்த்திடாதே!
   
என்ற பாடல் வரிகளுக்கு அர்த்தம் தெரியாமல் ஒருவர் காமெடி செய்ய அனைவரும் சிரிப்பது அங்கு ஒரு கலைவிழா போன்று இருக்கும்.

ஒருவனை அவன் முகத்தை பார்த்து பேசாமல், அவன் சென்ற பிறகு அவனது முதுகை பார்த்து பேசும் கொலைகளும் அங்கு இருப்பார்கள்.

இவ்வேட்டிமடத்தில்  இருப்பவர்கள் பள்ளி சிறுவர்களையும் தன்னுடன்  சேர்த்து வைத்து அவர்களுக்கு தேவை இல்லாத கதைகளை கூறுவார்கள்.
வெட்டிமடத்தில் பேசும் ஒன்றும் பயன்தரக்கூடியதாக இருக்கவே இருக்காது.

விடுமுறை விட்டால் போதும் அணைத்து சிறுவர்களும் அங்கே கூடுவார்கள். வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய எந்த செயலிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. அனைத்தும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். ஒருவனை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வேலையும் அங்கே நடக்கும்.

இலக்கு இல்லாத மனிதன்
      கூடைச்சாம்பலுக்கு  சமம்!

என்பதை அறியாத இவர்கள் எந்த இலக்குகளும் இல்லாமல் இருப்பது இவர்களை காலம் எப்படி உயர்த்தும். வெட்டிமடம் இருப்பதால் எவரும் உயரமுடியாத நான் அந்த கூட்டத்தை திட்டமிடவிருக்கிறேன்.

எனது தெரு உயருவதற்கு நல்லவழிகளை உருவாக்க தொடங்கிவிட்டேன்.
அதுபோல நீங்களும் நல்ல காரியங்களை உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு செய்து பாருங்கள் .






No comments:

Post a Comment