Monday, 26 March 2018

தவிக்கவிட்ட அம்மாவை நினைக்கும் மகன்

தன்னுடைய அம்மாவை மனைவியின் பேச்சைக்கேட்டு வீட்டை விட்டு வெளியேற்றிய மகன், அம்மாவை நினைத்து வருத்தமுடன்
                                                 எழுதும் 

பத்து மாதம் என்னை சுமந்தவளோ கஷ்டத்தில் 
உன்ன தவிக்கவிட்ட பாவியோ நான் உலகத்தில் 

அம்மா அழுவுறத  பாக்க என்னால் முடியல 
நீ கஷ்டப்படுறத பாக்க மனம் தாங்கல 

என் மனைவி வந்ததால் கைவிட்டேனோ தெரியல 
உன்ன கைவிடவோ என் மனமும் நினைக்கல 

என் ஆசையெல்லாம் நிறைவேற்றிய தெய்வமே!
உனக்கு சோறு தரமுடியாத நான் துரோகியே!

நீ சாப்பிடாம எனக்கு சோறு ஊட்டினாயே!
அம்மா பட்டினியாதான் பாக்காம உழைத்தாயே !

அப்படி உழைத்து ஒருபயனும் உனக்கில்லையே !
உனக்கு நன்றிசொல்லும் பாக்கியத்தில் நானில்லையே!

பல்லு  முளைக்க நெல்லு முனையால் கீறிவிட்ட 
தாயே நான் வளர பாசத்தத்தான் ஊட்டிவளத்த 

அப்படி வளத்து  ஒருபயனும் உனக்கில்லையே!
உனக்கு நன்றி சொல்லும் பாக்கியத்தில் நானில்லையே!

அடுத்த சென்மம் என்மகளாய்  நீபிறப்ப 
உன்ன அலுங்காம குலுங்காம பாத்துரசிப்பேன்.

No comments:

Post a Comment