Friday, 23 March 2018

தோழனும் தோழியும்


 Image result for தோழனும் தோழியும்

கல்லூரியின் தொடக்க நாள் அன்று. அட்ட்மிசனுக்காக   காத்திருக்கும் சுரேஷ் அருகில் கண்மணி  அமர்ந்திருந்தாள். அப்லிகேஷன் நிரப்ப பேணா கொண்டு வராத  கண்மணி  அருகில் இருந்த அந்த பையனிடம் கொஞ்சம் பேணா இருந்தால் தாங்க. இதை நிரப்பிவிட்டு தருகிறேன் என்றாள் . சுரேஷ் உடனே பேனாவை கொடுத்தான்.
தொடர்ந்து சுரேஷ் நீங்க என்ன டிபார்ட்மென்ட் செலக்ட் பண்ணியிருக்கீங்க  என்றான். அதற்க்கு அவள் தமிழ் டிபார்ட்மென்ட் என்று கூறினாள். அப்படியா நானும் தமிழ் டிபார்ட்மென்ட்தான்  என்று சுரேஷ் கூறினான். அன்றைக்கு அட்ட்மிசன்  முடிய மறு வாரம் வகுப்பு தொடங்கும் நாள் வந்தது. இருவரும் ஒரே வகுப்பில் வந்து சேர்த்தனர். சுரேஷ் ஹலோ கண்மணி என்று கூறினான். கண்மணியும் ஹலோ என்று தயக்கமாக கூறினாள். வகுப்பு தொடங்கியது. அன்றைய நாள் நன்றாக கழிந்தது.

 மறுநாள் இருவரும் வகுப்பு வந்து சேர்ந்தனர். அன்றும் இருவரும் அறிமுகம் செய்து கொண்டனர். இரண்டுநாள் அறிமுகத்திற்கு பிறகு இருவரும் பேசத் தொடங்கினர். இருவருக்குள்ளும் நல்ல நட்பு உருவானது. இருவரும் ஒன்றாக நூலகம் செல்வது , கேண்டீன் செல்வது என்று பிரிக்க முடியாத ஆலமரம் போன்று இருவரின் நட்பு விழுதுகளை விட்டு வளர்த்து நின்றது. நாளடைவில் நட்பு உடைக்க முடியாத பாறையைப்போன்று மாறியது. ஒருநாள் கண்மணியை ஒருவன் கேலி செய்தான். அதற்கு சுரேஷ் அவனை அடித்து,உதைத்து பழிவாங்கினான்.


          தோழா! தோழா !
          தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்.

 என்ற பாடல் வரிகளுக்கிணங்க இருவரின் நட்பும் ஒரு நட்பதிகாரமாக மாறியது.

கவிஞர்அறிவுமதி நட்பை பற்றி அழகாக கூறுவர்.

          காதலனுடன் இருக்கும்போது
          சேலையை சரிசெய்தேன்!
          தோழனுடன் இருக்கும்போது
          சேலையை சரிசெய்தான்!

நட்பு பயணம் என்ற தலைப்பில் அருமையாக சொல்வார்.

அந்த நீண்ட பயணத்தில்
என் தோளில் நீயும்
உன் மடியில் நானும்
மாறிமாறித்
தூங்கிக்கொண்டுவந்தோம்.

எத்தனை  அருமையான சிறப்புகள் நட்பிற்கு உள்ளது.

எனவே, நண்பர்களே  நட்புதான் ஒருவனின் வாழ்க்கை.
நட்பில்லையேல் அவன் ஒரு நடை  பிணம்.




No comments:

Post a Comment