Wednesday, 28 March 2018

என் மனதில் பதிந்த இந்தியா



எங்கள் தேசம் இந்தியா
இனிய தேசம் இந்தியா
மூன்று பக்கம் கடல்
நான்கு பக்கம் புகழ்
கொண்ட தேசம் இந்தியா

ஒற்றுமையின்  இலக்கணம் இந்தியா
இயற்கையின் இருப்பிடம் இந்தியா
போர்வீரரின் பிறப்பிடம் இந்தியா
கல்வியின் கல்வெட்டு இந்தியா

கங்கை யமுனா பாயும் தேசம் இந்தியா
காவிரி பாய்ந்து செழிக்கும் தேசம் இந்தியா
வைகையை வணங்கும் தேசம் இந்தியா
வாகைசூடும் வல்லமை தேசம் இந்தியா


காந்தி நேரு பிறந்த நாடு இந்தியா
அண்ணா அம்பேத்கார் வளர்ந்த நாடு இந்தியா
பாரதி போற்றும் உயர்ந்த நாடு இந்தியா
பலமொழிகள் பேசும் பரந்த நாடு இந்தியா

நேர்மை இதன் நேசம்
வாய்மை இதன் வாசம்

உண்மை இதன் உறைவிடம்
தாய்மை இதன் தலைமையிடம்

வீரம் இதன் பிறப்பு
வெற்றி இதன் சிறப்பு

அறிவே இதன் ஆக்கம்
உளவியல் இதன் ஊக்கம்

கருணை இதன் கருவிழி
இரக்கம் இதன் இருவிழி

அகிம்சை இதன் அருமை
சுதந்திரம் இதன் பெருமை

வந்தே!  மாதரம்

1 comment: