Wednesday, 28 March 2018

தரையில் வானம்

   


ஒருவன் நமக்கு மேலே இருக்கும் வானத்தை நம்கூடவே இருப்பதாக நினைத்து எழுதும் ஒரு படைப்பு

மண் இருப்பது தரையில்தான்
     மனிதன் இருப்பதும் தரையில்தான்
மரம் இருப்பதும் தரையில்தான்
     மக்கள் இருப்பதும் தரையில்தான்

நாம் பிறந்த சில மாதத்தில் தரையில் தவழ்கிறோம்
     வளர்ந்து பெரிதாகி வானில் பார்க்கிறோம்
விண்ணை ஆய்வு செய்யும் விண்வெளி நிலையம் உண்டு 
     மண்ணை வளப்படுத்த விவசாய தொழிலும் உண்டு 

வானம் பூமியை அடைய  வாய்ப்பில்லை 
      பூமி வானத்தை அடைய வாய்ப்பில்லை 
ஆனால் ஒரு வழியில் வானம் நம்மிடம் வருகிறது 
     அதுதான் மழை வழியாக 


நாம் மழைநீரை தொடும்போது 
     வானத்தை தொடுவதாக உணர்கிறோம் 
வானம் என் வீட்டில் என்று 
     புகழ் பாடுகின்றோம் 

ஆதலால் வானம் இருப்பதும் தரையில்தான் 
     வான் நிலவு இருப்பதும் தரையில்தான் 
தரையில் வானம் என்று சொல்வதில் ஐயமில்லை

1 comment: