செருப்புக்கு கவிதை வடிவில் ஒரு கடிதம்.
உன்னுடன் ஒரு பேட்டி எடுத்தவன்
மேத்தா
உனக்கு கடிதம் எழுதுபவன்
நான்
ஆதரவற்றவனுக்கு அன்னம்
இல்லாத தருணத்திலும்
உன்னை விற்க
ஆயிரம் விளம்பரங்கள்
உன்னை விற்பவன்
செல்கிறான் மகிழுந்தில்
உனக்கு மருத்துவம் பார்ப்பவன்
இருக்கிறான் தெருவீதியில்
சிலநேரங்களில் நீ
காணாமல் போய்விடுகிறாய்
கோவில் விழாக்களில்
ஒருநாள் உன்னை
காணமாட்டார்கள்
பாதயாத்திரை பக்தர்கள்
கைக்கிளை மேற்கொள்ளும்
தலைவனுக்கு தலைமகள்
எடுத்துக்காட்டும் எச்சரிக்கை
ஆயுதம் நீ
இருப்பினும்
உன் மருத்துவன்
சமூகத்தில் உயரவேண்டும்
அடியேன் அன்புடன் கேட்கிறேன்